கத்தார் சமரச முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இருதரப்பும் தலா 5 கைதிகளை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தோகாவில் ஒப்படைப்பு

0 1020

கத்தாரின் சமாதான முயற்சியால் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை மாற்றிக் கொண்டனர். ஈரானிய எண்ணெய் பணம் 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட தொகையை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டதையடுத்து அமெரிக்க கைதிகளை விடுவிக்க ஈரான் சம்மதம் தெரிவித்தது.

பத்தாண்டுகளாக ஈரான் சிறையில் இருந்த 5 அமெரிக்க கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் விடுவிக்கப்பட்டு கத்தார் ஜெட் விமானம் மூலம் தெஹ்ரானில் இருந்து தோகாவுக்குஅழைத்து வரப்பட்டனர்.

அதே போன்று 5 ஈரான் கைதிகளையும் அமெரிக்கா விடுதலை செய்தது. அவர்களும் விமானம் மூலம் டோகா சென்றடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments