சென்னையில் 3 நாட்களாக நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை நிறைவு

0 679

கடந்த 3 நாட்களாக சென்னையில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான எழும்பூர் ரயில் நிலையம், தியாகராயர் நகர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டால் நிலமையை எப்படி எதிர்கொள்வது என பயிற்சி மேற்கொண்டனர்.

ரிப்பன் மாளிகை, துறைமுகப் பொறுப்புக் கழகம், ONGC அலுவலகம், ஐ.டி.சி கிராண்ட் சோழா, ரிசர்வ் வங்கி தலைமையகம் போன்றவற்றை பயங்கரவாதிகள் கைப்பற்றினால், ஹெலிகாப்டர் மூலம் கட்டடத்தின் மீது தரையிறங்கி பணயக்கைதிகளை மீட்கவும் ஒத்திகை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments