உனக்கு வேறு பெண் கிடைக்கவில்லையா ? சீமானின் குரல் வளையை பிடித்த சம்பவம்..! மனைவி கயல்விழி கோபப்பட்ட தருணம்..!

0 2542

நடிகையின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கய்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

அங்கு திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரின் தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேறி நுழைந்ததால் காவல்துறையினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு நீடித்தது.

பின்னர் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உமையாள், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலையில் சீமான் ஆஜரானார். ஒரு மணி நேரம் வரை நடந்த விசாரணைக்கு பின்னர் வெளியில் வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

தன் மீதான புகாருக்கு திமுக தூண்டுதல் காரணம் எனவும் 2011-ல் கொடுத்த முதல் புகாரே திமுக தூண்டுதல் தான் என்றார்.

 

இந்த விவகாரத்தில் முக்தார், வீரலட்சுமிக்கு வாழ்க்கையில் மன்னிப்பே கிடையாது. வீரலட்சுமி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

 

சீமான் மலை போல் இருப்பதால் எனக்கு இந்த விவகாரத்தினால் மன உளைச்சல் இல்லை என்றார். திடீரென குறுக்கிட்ட சீமான் ஒரு நாள் எனது மனைவி எனது குரல்வளையை பிடித்துக் கொண்டு, நாட்டில் எவ்வளவோ பெண்கள் இருக்கும் பொழுது ஏன் அந்த பெண்ணிடம் பழகினாய் என்று கேட்டார் என சீமான் சிரித்த படியே கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments