"அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை" ஜெயகுமாரின் அதிரடி..! அசராத அண்ணாமலை..!!

0 2269

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இது குறித்து மேலிடத்துக்கு அறிக்கை தயாரித்து அண்ணாமலை அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை ராயபுரத்தில் உள்ள தேன் விநாயகர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசினார் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார். அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை என்று கூறிய அவர், தேர்தல் வரும் போது பா.ஜ.க.வுடனான கூட்டணி பற்றி முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

அண்ணா, பெரியார், கட்சிப் பொதுச் செயலாளரை அண்ணாமலை விமர்சிப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள ஜெயகுமார், கூட்டணி தொடர்பான முடிவால் அ.தி.மு.க.வுக்கு இழப்பு இல்லை என்றும் பா.ஜ.க.வுக்குத் தான் இழப்பு என்றும் கூறியுள்ளார்.

கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்பது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சந்தோஷம் என தெரிவித்துள்ள ஜெயகுமார், பா.ஜ.க. தொண்டர்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார்கள், ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பேசிய கருத்துகளை மேலிடத்துக்கு அறிக்கையாக தயாரித்து அண்ணாமலை அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது நிலைப்பாட்டில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாகவும், தான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தான் பேசிய விஷயங்களை அண்ணாமலை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் முன் வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை என்பதிலும் அண்ணாமலை திட்டவட்டதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அண்ணாமலையின் அறிக்கையின் அடிப்படையில் கூட்டணி தொடர்பான முடிவுகளை மேலிடம் எடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments