பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை - ஜெயகுமார் அதிரடி அறிவிப்பு

0 2527

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வரும் போது பா.ஜ.க.வுடனான கூட்டணி பற்றி முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்ணா, பெரியார், கட்சிப் பொதுச் செயலாளரை அண்ணாமலை விமர்சிப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள ஜெயகுமார், கூட்டணி தொடர்பான முடிவால் அ.தி.மு.க.வுக்கு இழப்பு இல்லை என்றும் பா.ஜ.க.வுக்குத் தான் இழப்பு என்றும் கூறியுள்ளார்.

கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்பது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சந்தோஷம் என தெரிவித்துள்ள ஜெயகுமார், பா.ஜ.க. தொண்டர்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார்கள், ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments