மும்பை டபுள்டெக்கர் மாடிப் பேருந்துகள் விடை பெற்றன.. நிர்வாக செலவை ஈடுகட்ட முடியாமல் நிறுத்தப்படுவதாக தகவல்.. !!

0 891

மும்பை நகரின் அழகுக்கு அழகு சேர்த்த டபுள் டெக்கர் மாடி பேருந்துகள் நேற்று சூரிய அஸ்தமனத்தில் தங்கள் 86 ஆண்டுக் கால பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன.

மும்பை நகரை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாடி மேல் அமர வைத்து வலம் வந்த சிவப்பு நிறத்திலான இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.

கடைசிப் பேருந்து சீப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் புறப்பட்டது. கடைசி பயணத்தை நினைவில் வைத்திருங்கள் என்று கூறியபடி நடத்துனர் டிக்கெட்டுகளைக் கொடுத்தார்.

மும்பை நகரின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த இந்தப் பேருந்துகள் நிர்வாக செலவுகளை ஈடுகட்ட முடியாததாலும் ஏசி போன்ற நவீன வசதி கொண்ட புதிய பேருந்துகள் இயக்கப்படுவதாலும் நம் நெஞ்சில் நீங்காத நினைவுகளோடு பிரியா விடைபெற்று விட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments