அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள்.. அடியாட்களுடன் சென்று மதுபோதையில் ஊராட்சி செயலாளர் தகராறு.. !!

0 857

பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் பிரிவு பாதை, முல்லை நகர், காந்தி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம், அடியாட்களுடன் சென்று ஊராட்சி செயலர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, குற்றம் சாட்டப்படும் செங்குணம் ஊராட்சி செயலர் கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments