நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..!

0 1030

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோரின் நியமன மசோதா உள்பட நான்கு  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம் மாற்றம், 4 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய இன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் தொடங்குகிறது.18ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய அரசின்அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் என்ன என்று அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.

கூட்டத் தொடரின் முதல் அமர்வில், அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரையிலான நினைவுகள் குறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஆனால் மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இம்முறை தாக்கல் செய்யப்படவில்லை.அதே போல் இந்தியாவை பாரதம் என்று பெயர்மாற்றும் மசோதாவும் இத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இன்று நாடாளுமன்றத்தின் கூட்டம் பழைய கட்டடத்திலேயே தொடங்குகிறது.வடமாநிலங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால் நாளை புதிய கட்டடத்திற்கு நாடாளுமன்ற அலுவல்கள் இடம் மாற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments