என்னய்யா சொல்றீங்க... மார்க் ஆண்டனி படம் ஹிட்டா ? இதை எஸ்.ஜே.சூர்யா எதிர்பார்க்கல..! நடிப்பு அரக்கா... என்று கூச்சல்..!

0 3196

படம் வெளியாகி 2 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி நடிகர் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலை கண்டு எஸ்.ஜே. சூர்யா மிரண்டு போனார்.

விஷால், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ள டைம் டிராவல் படமான மார்க் ஆண்டனி, வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி முழுசா 2 நாட்கள் ஆகாத நிலையில் படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துவிட்டதாகக் கூறி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பையும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையையும் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டிய நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு ரசிகர்களை சந்திக்கச் சென்ற எஸ்.ஜே. சூர்யாவை, நடிப்பு அரக்கன் என்று கூச்சலிட்டு ரசிகர்கள் வாழ்த்தினர்.

ரசிகர்களின் உற்சாகத்தை கண்டு திக்குமுக்காடி போனார் எஸ்.ஜே. சூர்யா.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு ஒரு கம்பேக்கை (comeback) கொடுத்திருப்பதாக நம்பும் விஷாலின் தம்பிகள் படம் மாபெரும் வெற்றி அடைந்துவிட்டதாக கூறி அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

பிளாக்பஸ்டர் என்ற பெயருடன் தயாராக இருந்த கேக்கை வெட்டிய விஷால் அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார். ஓரமாக நின்ற படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஒரு துண்டு கேக் வழங்கப்பட்டது.

விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

படத்தில் சில்க் ஸ்மிதா சாயலில் தோன்றிய திருப்பதியை சேர்ந்த டிக்டாக் நடிகை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

மார்க் ஆண்டனி படம் வந்து முழுசா 3 நாட்கள் முடிவதற்குள்ளகவே வெற்றிவிழாவா ? என்று கருத்து பதிவிட்டு வரும் நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments