எங்கள் நிலத்தை அளப்பதற்கு எம்எல்ஏ எப்படி மனு செய்ய முடியும்..? நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

எங்கள் நிலத்தை அளப்பதற்கு எம்எல்ஏ எப்படி மனு செய்ய முடியும் எனக் கூறி நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மந்திக்குளம் பகுதியில், விவசாய நிலங்களுக்கு இடையே செல்லும் வண்டிப்பாதையை பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அளவீடு செய்ய வேண்டுமென தி.மு.கவைச் சேர்ந்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ, மார்க்கண்டேயன் மனு செய்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், அப்பகுதியில் நிலம் வைத்துள்ள 47 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பபட்டதாகவும், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. காற்றாலை நிறுவனங்களுக்காகவே நிலம் அளவீடு செய்யப்படுவதாகக் கூறி போலீஸாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவீட்டுப் பணி நிறுத்தப்பட்டது.
Comments