மணல் மாபியாக்களும், தி.மு.க அமைச்சர்களின் பினாமிகள் மட்டுமே வாழும் பகுதியாகி விட்டது வேடசந்தூர் -அண்ணாமலை பேச்சு

0 887

மணல் மாபியாக்களும், அமைச்சர்களின் பினாமிகள் மட்டுமே வாழும் பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அவர் என் மண், என் மக்கள் நடைபயணத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கினார். அவருக்கு வழி எங்கும் கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஆத்து மேட்டில் திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசினார் அப்போது, தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த போதும் கூட, வேடசந்தூரின் ஜீவநதியாக இருக்கும் குடகனாறு அணையை சரி செய்ய முடியவில்லை என்றார்.

அணையை சரி செய்து, ஆற்றை சுத்தப்படுத்தி தண்ணீர் தேக்கினால் மணல் அள்ள முடியாது என்ற காரணத்திற்காக, ஆற்றை சரி செய்யாமல் தண்ணீரை தேக்காமல் மணல் மாபியாவிற்கு சிலர் துணை போவதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments