போலீசாரை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம்.. இருசக்கரவாகனத்தில் சந்தனமரக்கட்டை கடத்தியவர் கைது..!

கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியிடம் இருந்து 9 கிலோ சந்தனமரக்கட்டை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவின் மேம்பாலம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர்.
போலீசாரை பார்த்ததும் தமது வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு அம்ஜத் அலி என்பவர் தப்பிச் சென்றார். அவரை போலீசார் பின்தொடர்ந்து பிடித்து விசாரித்தபோது, சந்தன கட்டைகள் கடத்தல் விவகாரம் தெரியவந்தது.
Comments