நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 4 பேர் பலி, 3 பேர் படுகாயம்..!

ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிமெண்ட் சாலையில் அதிவேகமாக வந்ததால், ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து சந்திரகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments