கட்சியாவது கிட்சியாவது.. வெட்டிட்டு போய்ட்டே இருப்பேன்.. நான் கேடுகெட்ட ரவுடிப் பய.. பொங்கிய சீமான்..!

0 2169

தான் கேடு கெட்ட ரவுடிப் பய, தனக்கு வேறு முகம் உள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தன்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாகக் கூறும் வீரலட்சுமியால் ஒரு ஸ்கெட்ச் பேனாவை கூட அவர்களால் தூக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் சீமான்....

சென்னை அயனாவரத்தில் தமது கட்சியின் தென் சென்னை மற்றும் வட சென்னை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார் சீமான். அவரிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது...

ஆயிரம் ரூபாய் மூலம் தாய்மார்கள் என்ன வளர்ச்சி கண்டுவிடுவார்கள் என்று கேள்வி எழுப்பிய சீமான், இந்த திட்டத்துக்கான பணம் யாருடையது என்று வினவினார்.

நடிகையின் பாலியல் புகார் தொடர்பான கேள்விக்கு, 2 லட்சுமி வெடிகளை வைத்து மலையை தகர்க்கப் பார்க்கிறார்கள் என்று பதிலளித்தார். 13 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த புகார் மீது இவ்வளவு தாமதமாக நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினர் இத்தனை நாள் செக்யூரிட்டி வேலைக்கா சென்றிருந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார் சீமான்.

தன்னை ஸ்கெட்ச் போட்டு தூக்க வீரலட்சுமி யார் என்று கேட்ட சீமான், ஒரு ஸ்கெட்ச் பேனாவை கூட அவரால் தூக்க முடியாது என்றார்.

ஒரு கட்டத்தில், தான் கேடு கெட்ட ரவுடிப் பய, தனக்கு வேறு முகம் உள்ளது என்று ஆவசமான சீமான், கட்சியாது கிட்சியாது என்று வெட்டிவிட்டு போய்க் கொண்டே இருப்பேன் என்றார்.

தனது மனைவி கயல்விழி வழக்கறிஞர் என்ற முறையில் தன்னுடன் காவல் நிலையம் வருவார் என்றும் ஆனால் கவிஞர் தேன்மொழியை தான் ஏன் அழைத்து வர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தன் மீது புகார் கூறிய இரு லட்சுமிகளும் தனக்கு வேண்டாம் என்றும் தனக்குத் தேவையானது தனலட்சுமியையும் தான்யலட்சுமியையும் தான் என்றும் கூறினார் சீமான்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments