பழுதாகி நின்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து - 10 பயணிகள் காயம்

0 2002

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்.

அதிகாலையில் சென்னையில் இருந்து 45 பயணிகளை ஏற்றுக் கொண்டு  கோயம்புத்தூர் நோக்கி  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.

பேருந்தின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை பேருந்தில் பயணித்தவர்கள் மீட்டனர். காயம் அடைந்தவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments