சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
நத்தம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்.. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!
தினசரி இயக்கப்பட்ட பேருந்துகளை ஒரு வாரமாக நிறுத்தியதாக அரசுப்பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தாம்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி, கோமனாம்பட்டி வழியாக சாத்தாம்பாடிக்கு தினசரி 5 முறை பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
முறையாக பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய காவல் மற்றும் போக்குவரத்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Comments