சீறிய தம்பிகள்... தப்பிய வீரலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் சண்டை பீப்’போடும் அளவுக்கு பாய்ச்சல்..!

0 2550

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சீமான் மீது புகார் அளிக்க வந்த வீரலட்சுமிக்கு எதிராக கோஷமிட்ட சீமான் ஆதவாளர்கள், ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்க வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆவேசமான காட்சிகள் தான் இவை..!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தமிழர் முன்னேற்றம் படை தலைவர் வீரலட்சுமி , சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்க வந்திருந்தார். நாம் தமிழர் கட்சியினர் சிலர் வீரலட்சுமி மீது அளித்த புகாரில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சீமான் கட்சியினரை அனைவரும் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் காவல் ஆணையர் அலுவலக வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்

போலீஸார் கதவுகளை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேற்றியது

போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி 5 பேரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்த நிலையில் , வீரலட்சுமியை கண்டதும் காண்டான நாம்தமிழர் கட்சியினர் வீரலஷ்மியை ஆபாசமாக திட்டியபடி அடிக்க பாய்ந்தனர் போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக வீரலட்சுமியை அழைத்து சென்றனர்.

சீமான் மீது நடிகையும் வீரலட்சுமியும் பணம் பறிக்கும் நோக்கத்துடனே தொடர்ந்து புகார் கூறிவருவதாக நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் அய்யனார் குற்றஞ்சாட்டினார்

செய்தியாளர்களை சந்தித்த வீரலெட்சுமி புகார் அளிக்க வந்த போது காவல்துறை அதிகாரிகள் முன்பே நாம் தமிழர் கட்சியினர் கத்தி சீன் போட்டனர், இந்த சீன் எல்லாம் நான் 17வயதிலே பார்த்துவிட்டேன். நான் வேறொரு அவதாரத்தை காண்பித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என கூறி எச்சரித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments