தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க ஆவின் விலை உயர்வு... பண்டிகைகள் வரவிருப்பதால் விலை உயர்வை கைவிட வேண்டும்: அண்ணாமலை

0 913

பொதுமக்களைப் பாதிக்கும் ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்பப் பெற்று ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்னும் சில நாட்களில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில் இன்று முதல் அமலுக்கு வரும் ஆவின் பொருட்களின் விலையுயர்வு, தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்றும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி, பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் மட்டும் உயர்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பால் பொருள்கள் விலையை தி.மு.க. அரசு பல மடங்கு உயர்த்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதை பார்க்கும் போது தனியார் பால் நிறுவனங்களை வளர்ப்பதற்காக ஆவின் நிறுவனத்தையே அழித்து விட தி.மு.க முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments