சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
முருங்கைக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காத விரக்தியில் டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி

அரியலூர் மாவட்டம் வீரசோழபுரத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி, முருங்கைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று கூறி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் விளைவித்திருந்த முருங்கை மரங்களை டிராக்டர் கொண்டு அழித்தார்.
கும்பகோணம் சந்தையில் முருங்கைக்காய் கிலோ 2 அல்லது 3 ரூபாய்க்கு மட்டுமே விற்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள முருங்கைக்காய்களை அறுவடை செய்ய கூலி கொடுக்கக் கூட தன்னிடம் பணம் இல்லை என்று கூறி, பூவும் காயுமாக இருந்த முருங்கை மரங்களை குமார் டிராக்டர் கொண்டு அழித்தார்.
முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
Comments