நடிகர் விஜய் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

0 3226

நடிகர் விஜய் தனது பெற்றோரை சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இரு தினங்களுக்கு முன்பாக சென்னை வந்த நடிகர் விஜய் தனது அப்பா எஸ்ஏசி ஐ நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தன் பெற்றோரை கவனிப்பதில்லை என விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments