நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அங்கிருந்து வாகனங்களில் தமிழகம் வருவோருக்கு ஆறு மாவட்ட எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இருந்தபடி துவக்கி வைத்த மத்திய அரசின் சுகாதார திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர்.
கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
Comments