விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் சென்னை காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம்.. !!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் விநாயகர் சிலையை நிறுவக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 18ஆம்தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், பல்வேறு இந்து அமைப்புகளுடன் சென்னை காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
29 இந்து அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
10 அடிக்கு மேல் சிலைகள் இருக்கக்கூடாது என்றும், பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Comments