மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய கணவர் கைது.. !!

0 835

புதுச்சேரியில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு புடவை பீரோவில் மாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசி என்ற பெண் வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த து குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில் வீட்டு வாசலில் இருந்த பீரோவின் கைப்பிடியில் கலையரசியின் புடவை மாட்டிக்கொண்டு கழுத்து நெரித்து இறந்ததாகவும், தான் செய்வது அறியாமல் மனைவியின் உடலை வீட்டு வாசலில் போட்டு விட்டு பின்புறம் சென்று உறங்கி விட்டதாகவும் கணவர் ராஜேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ராஜேந்திரன் மீது சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று பார்த்த போது அதில் கலையரசி துன்புறுத்தப்பட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ராஜந்திரனை மீண்டும் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தனக்கு மது அருந்த பணம் தராத காரணத்தால் மனைவியிடம் சண்டையிட்டு புடவையை பின்பக்கமாக கழுத்தை நெரிக்கும் படி இழுத்து பிடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments