35 பயணிகளுடன் அரசு பேருந்து கடத்தல் பயணிகளிடம் பணம் வசூல்..! கொள்ளையன் செய்த கலகலப்பு சம்பவம்..!

0 13657

பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன், நின்றிருந்த அரசுப் பேருந்தை கடத்திச்சென்ற ஆசாமி ஒருவன், 50 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற நிலையில் பேருந்தில் டீசல் தீர்ந்து போனதால் நடுவழியில் நிறுத்திவிட்டு மாயமானான். கடத்தப்பட்ட பேருந்தில் இருந்த பயணிகளிடம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிய கொள்ளையன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

அரசு பேருந்தை அசால்ட்டாக கடத்திவந்து பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட நச் கிட்னாப்பர் தேலராஜூ இவர் தான்..!

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய மர்ம ஆசாமி ஒருவன் பணிகளிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அனைவரிடமும் டிக்கெட் கட்டணம் வாங்கிக் கொண்டு பேருந்தை கிளப்பினான்.

அடுத்த நிறுத்தத்தில் கண்டக்டர் வந்து உங்களுக்கு டிக்கெட் கொடுப்பார் என்று கூறி பேருந்தை ஒட்டி சென்றான்.
பயணிகளும் அமைதியாக இருந்ததால் சுமார் 50 கிலோ மீட்டர் சென்ற பேருந்து நடு வழியில் திடீரென்று நின்றுவிட்டது. பேருந்தில் டீசல் தீர்ந்து போனதால் எவ்வளவோ முயன்றும் பேருந்தை அந்த திருடனால் மேற்கொண்டு ஓட்ட இயலவில்லை.

பேருந்தை விட்டு பயணிகளை இறங்கச்சொன்ன மர்ம ஆசாமி மீது சந்தேகம் எழுந்ததால் அவரை செல்போனில் படம் எடுத்த சிலர் உண்மையிலேயே உன்னை பார்க்க ஓட்டுனர் மாதிரி தெரியவில்லையே என்று கேள்வி கேட்டனர்

இனிமேல் தப்ப முடியாது என்று உணர்ந்த அந்த திருடன் ஐயா நான் அரசு பேருந்து ஓட்டுனர் கிடையாது. இந்தப் பேருந்தை காயலான் கடையில் போடுவதற்காக திருடி கொண்டு வந்தேன் என்று கூறி பயணிகளுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கினான்

பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து அந்த திருடனையும் பேருந்தையும் வீடியோ எடுத்து போலீசுக்கு அனுப்பி வைத்தனர். பயணிகள் தொலைபேசியில் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.

இந்த பரபரப்புக்கு இடையே அந்த திருடன் அங்கிருந்து மாயமாகி விட்டான். அதே நேரத்தில் பேருந்தை காணவில்லை என்று அந்த பேருந்தின் உண்மையான ஓட்டுனர் சாமி சித்தி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் , பேருந்தை கடத்திவந்த தேலராஜூ என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments