குடியரசு தலைவர் அளித்த விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்? - சீமான் கேள்வி

டெல்லியில் ஜி 20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் அளித்த விருந்தில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள எந்த மாநிலத்தின் முதலமைச்சரும் பங்கேற்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேக்கே அழைப்பு விடுக்காத போது ஸ்டாலின் கலந்து கொண்டது ஏன் என்று வினவினார்..
திமுக-வே சனாதன கோட்பாட்டில் ஊறிப்போன ஒரு கட்சி என்று விமர்சித்த சீமான், சனாதனம் என்ற சொல்லே சமஸ்கிருத சொல், அந்த வார்த்தையை ஒழிக்க முடியாமல் எப்படி சனாதன கொள்கையை ஒழிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
Comments