மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி..!

சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அய்யனார்- சோனியா தம்பதியரின் மகன் ரக்சன் சளி பாதிப்பிற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணமென குற்றஞ்சாட்டி சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர். இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments