வீட்டில் சுய பிரசவம் பார்த்த பெண் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழப்பு..!

0 2744

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே சுய பிரசவம் பார்த்த பெண் ஒருவர், தனக்கு 6-வதாக பிறந்த ஆண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படும் நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக அவரும் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான செந்திலுக்கு திருமணமாகி மனைவி வசந்தியும் 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், 40 வயதில் வசந்தி 6-வதாக கர்ப்பம் தரித்த நிலையில், வலி எடுக்கவே வீட்டில் வைத்தே சுய பிரசவம் பார்த்ததாகவும், ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வசந்திக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கவே, அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வீட்டிற்கு வந்து பார்த்த போது பிளாஸ்டிக் வாளி ஒன்றில், கழுத்து நெரிக்கப்பட்டு வாயில் துணியை வைத்து அடைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குடும்ப வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை தாயே கொன்றிருக்கலாம் என கூறப்படும் நிலையில், செந்திலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments