விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ள விரைவு நெடுஞ்சாலை மூலம் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும் - அமைச்சர் நிதின் கட்கரி

0 4253

விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ள விரைவு நெடுஞ்சாலை மூலம் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, ஹைட்ரஜன் பயன்பாட்டில் இயங்கும் பேருந்து மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சரக்கு வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

விழாவில் பேசிய நிதின் கட்கரி, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான விரைவு நெடுஞ்சாலைத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

மெத்தனாலில் இயங்கும் பேருந்து மற்றும் லாரிகளை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்பதுதான் தமது கனவு என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

வாகன உற்பத்தி துறையில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, சில ஆண்டுகளில் முதல் இடத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments