செப்டம்பர் 7-ம் தேதி ஜோ பைடன் இந்தியா பயணம் - வெள்ளை மாளிகை தகவல்

டெல்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, இரு தினங்களுக்கு முன்னரே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 7-ஆம் தேதி இந்தியா வரும் ஜோ பைடன், 8-ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
ஜி20 மாநாட்டில், பசுமை ஆற்றல், காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய விவகாரங்கள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments