உளுந்தூர்பேட்டையில் ரூ.50க்கு பெட்ரோல் போட சொல்லி, சரியாக போட்டீர்களா என கேட்டு வாக்குவாதம்

உளுந்தூர்பேட்டை - சென்னை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்த இளைஞர்கள் சரியாக பெட்ரோல் போட்டீர்களா என வாக்குவாதம் செய்து, ஊழியரை சரமாரியாக தாக்கியது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு கொண்டு பணத்தை கொடுத்த பிறகு, ராமர் என்ற ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சிசிடிவி பதிவுகளை கொண்டு, உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் குணபாலன் தலைமையிலான தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Comments