இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் இடத்தை பிடித்தார் தமிழத்தை சேர்ந்த குகேஷ்

0 8398

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.

சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள பட்டியலில் சர்வதேச அளவில் 2 ஆயிரத்து 758 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்ததையடுத்து இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

சர்வதேச அளவிலான பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்திலும், உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா 19வது இடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments