சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு... ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

0 1305

உலக கோப்பை சதுரங்க போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ஏராளமானோர் கூடி மலர் கிரீடம் அணிவித்தும், மலர்களை தூவியும் வரவேற்றனர்.

தம்மை வரவேற்க வந்த ரசிகர்களுக்கு மத்தியில் தமது தாயார் சிக்கிக்கொண்டதால் பதற்றமடைந்த பிரக்ஞானந்தா, அவர் காரில் ஏறிய பிறகே நிம்மதியடைந்தார்.

பின்னர், பேட்டியளித்த பிரக்ஞானந்தா, தங்கப் பதக்கம் தவறியது சிறிது வருத்தம் அளித்தாலும் வெள்ளி வென்றது மகிழ்ச்சியே என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பிரக்ஞானந்த வாழ்த்து பெற்றார். அப்போது, தமிழக அரசின் சார்பில் 30 லட்ச ரூபாய்க்கான காசோலையை பிரக்ஞானந்தாவிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அம்பத்தூரில் உள்ள தமது வீட்டிற்கு சென்ற பிரக்ஞானந்தாவிற்கு இரு பக்கங்களிலும் வாழை மரங்களால் அங்கலரித்து, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments