நடிகர் வீட்டின் நீச்சல் குளத்திற்குள் முதலைக்குட்டி ..! காகமா ? பருந்தா ? யார் காரணம்

0 2851

பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் பேரன் வீட்டு நீச்சல் குளத்திற்குள் முதலைக்குட்டி ஒன்று பிடிப்பட்டுள்ளது. ஆமையுடன் முதலை குட்டி புகுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

ஒரு நாள் போதுமா... என்று தனது ஜனரஞ்சக நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் பழம் பெரும் காமெடி நடிகர் டி.எஸ்.பாலையா. இவரது பேரன் பாலாஜி தங்க வேல் வீட்டின் நீச்சல் குளத்திற்குள் தான் முதலை குட்டி புகுந்துள்ளது..!

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வரும் பாலாஜி தங்கவேல், மழை நீர் நிரம்பி அழுக்கடைந்து காணப்பட்ட தனது வீட்டின் நீச்சல் குளத்தை சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்,

அப்போது ஒரு அடி நீளத்தில் ஏதோ தண்ணீரில் நீந்துவதை கண்ட அவர், நீச்சல் குளத்தில் இருந்த நீரினை முழுவதுமாக வெளியேற்றினார்.

அப்போது குளத்திற்குள் முதலைக்குட்டி ஒன்று இருப்பதை தெரிந்துக்கொண்ட அவர் அதனை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக கூடையில் வைத்தார். அதில் ஆமை ஒன்றும் கிடந்தது அதனையும் பத்திரமாக மீட்டார்

இது குறித்து வனதுறையினருக்கு தகவல் அளித்தார். வீட்டுக்கு வந்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் அந்த முதலைகுட்டியினையும், ஆமையையும் ஒப்படைத்தார்.

அவர்கள் அவற்றை உயிரியல் பூங்காவிற்கு பத்திரமாக கொண்டு சென்றனர். பாலாஜி தங்கவேலின் வீட்டை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் இருந்து இந்த முதலைக்குட்டியை காகம் அல்லது பருந்து தூக்கி வந்து நீச்சல் குளத்திற்குள் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது

நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் முதலைகள் அவ்வப்போது பிடிபடுவது வாடிக்கையாகி வருவதால் வனத்துறையினர் நீர் நிலைகளில் இருக்கும் முதலைகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments