நீட் தேர்வு மரணங்களுக்கு மத்திய அரசு தான் காரணம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வு மரணங்களுக்கு மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வால் மாணவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரும் உயிரிழப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தில் ரமணா பட பாணியில் இறந்துபோன 88 ஆயிரம் பேர் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
Comments