ஆல்-அவுட் மருந்தை குடித்த 2 வயது பெண் குழந்தை பலி..!

சென்னை மாத்தூரில் கொசு விரட்டியான ஆல் அவுட் மருந்தை குடித்த இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இதுபோன்ற ஆபத்தான பொருட்களை குழந்தைகள் எடுக்காதபடி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
பாலாஜி - நந்தினி தம்பதியரின் இரண்டாவது குழந்தையான லட்சுமி, நேற்று பகல், நந்தினி கழிவறை சென்றிருந்த நேரத்தில் சுவிட்ச் போர்டில் பொருத்தியிருந்த ஆல்அவுட் பாட்டிலை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சியுள்ளார். அங்கு வந்த நந்தினி உடனடியாக அதனை பிடுங்கிய நிலையில், குழந்தையின் வாயிலிருந்து நுரை தள்ளியதால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Comments