காதலுக்கு எதிர்ப்பு.. தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட பள்ளி மாணவி ..! elder லவ்வருடன் lock

0 2530

தேனி அருகே தன்னைவிட 10 வயது மூத்த காதலனை ஏவி, தந்தை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய 11 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்தனர். பிஞ்சிலே பழுத்த லிட்டில் பிரின்சஸால், பலத்த காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடும் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

போலீசாரின் சிறப்பு கவனிப்பால் நடக்க இயலாமல் கால் ஒன்றை, ஒரு பக்கமாக தாங்கி.. தாங்கி.. நடந்து செல்லும் இவர் தான் 11 ஆம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, அவரது தூண்டுதால் கொலை முயற்சி வழக்கில் சிக்கி இருக்கும் வாழவந்தான்..!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் வேணுகோபால் பாண்டியன்- உமா மகேஸ்வரி. தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். வேணுகோபால் பாண்டியன் பழைய இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை இரவு எட்டு மணி அளவில் வாசவி காலனியில் இருந்து ஆஞ்சநேயர் நகர் செல்லும் சாலையியில் வேணுகோபால் பாண்டியன் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.

ஸ்கூட்டரில் செல்லும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டிருக்கலாம் என்று 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், அவரது தலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் இது கொலை முயற்சியாக இருக்கலாம் என்று போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றது தெரிய வந்தது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கேட்பாரற்று ஒரு இருசக்கர வாகனமும் கிடந்துள்ளது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் , பெரிய குளத்தை சேர்ந்த முத்துக்காமாட்சி என்கிற வாழவந்தான், செல்வக்குமார், கண்ணப்பன் ஆகியோரை பிடித்து விசாரித்த போது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கோபால் பாண்டியன் மீது நிகழ்ந்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

வேணுகோபால் பாண்டியனின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு முடித்த நிலையில், தன்னை விட 10 வயது மூத்தவரான வாழவந்தானை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் அறிந்து மகளை வேணுகோபால் பாண்டியன் சரமாரியாக தாக்கியுள்ளார். வாழவந்தானையும் எச்சரித்துள்ளார்

மகளை தொடர்ந்து படிக்க அனுப்பாமல் , தனது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் வேணுகோபால் பாண்டியன் , காதலனை சந்தித்து பேசிவிடக்கூடாது என்பதற்காக மாணவியை ஒவ்வொரு ஊரில் உள்ள உறவினர்கள் வீடாக மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். செல்போன் மூலம் தான் இருக்கும் இடத்தை காதலனுக்கு தெரிவித்த மாணவி, அவருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக்கி உள்ளார்

அப்போது தங்கள் காதலுக்கு இடையூறாக உள்ள தந்தையை கொலை செய்ய அந்த மாணவி ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டு, தங்கள் விருப்பப்படி நடக்கிறேன் என்று தந்தையிடம் வாக்குறுதி அளித்து அந்த மாணவி தனது வீட்டிற்குள் வந்துள்ளார். மகள் படிப்பு வீணாகக்கூடாது என்று 11 ஆம் வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார் வேணுகோபால் பாண்டியன்.

சம்பவத்தன்று தனக்கு ‘சாக்ஸ்’ வாங்க தந்தையை கடைக்கு அனுப்பி விட்டு , தனது காதலனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி வேணுகோபால் பாண்டியனின் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாழவந்தான், கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை இடித்து தள்ளி கீழே விழவைத்து, தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து தந்தையை கொலை செய்ய காதலனை ஏவிய அந்த மாணவியுடன் சேர்த்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments