வாய மூடுறியாடா நீ... ஏண்டா கேள்வி கேட்குற.. வித்தியாசமாக கூவிய விஜயலட்சுமி..! ஆதாரம் கேட்டதால் அம்மனி ஓட்டம்

0 11766

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை, திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலெட்சுமி 12 வருடங்கள் கழித்து 2 வது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் ஆதாரம் இருக்கின்றதா ? என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டி விட்டு சென்றார்.

14 வருஷத்துக்கு முன்பு சீமான் தன்னை மதுரையில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தான் பெரியார் தொண்டர் என்று கூறி தாலிகட்டுவதை தவிர்த்த அவர்,தனது வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடிகை விஜயலெட்சுமி 2 வது முறையாக புகார் அளித்தார்.

புகார் அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த விஜயலெட்சுமி மற்றும் வீரலெட்சுமி ஆகியோரிடம் ஏற்கனவே இது குறித்து புகார் அளித்து விட்டு சமாதானம் செய்து கொண்டது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் மீது ஏற்கனவே புகார் அளித்த போது வழக்கறிஞர் ஒருவர் சமரசம் பேசியதாகவும், விஜயலெட்சுமியை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்வதற்கு சீமான் சம்மதித்து விட்டதாக கூறியதால் அந்த புகார் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துச்சென்றதாக தெரிவித்தனர்.

சீமான் திருமணம் செய்து கொள்வதாகவோ அல்லது செய்து கொண்டதற்கான எழுத்து பூர்வ ஆதாரம் உள்ளதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப ஆத்திரம் அடைந்த விஜய லெட்சுமி, அரை நிர்வாண கோலத்தில் நிற்கும் சீமான் தன்னை பொண்டாட்டி என்று கூறிய வீடியோ ஆதாரத்தை தான் ஏற்கனவே வெளியிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு தனது பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு சென்றார் விஜயலெட்சுமி, அவரை வழக்கறிஞர் சமாதானப்படுத்தினர், தனக்கு ஆதரவானவர்கள் மட்டும் கேள்வி கேளுங்கள் என்று திரும்பி வந்தார்.

அவரிடம், சீமானை திருமணம் செய்து கொண்டதற்கு என்ன ஆதாரம் என்று மீண்டும் செய்தியாளர் கேள்வி எழுப்பியதும் கடுப்பான விஜயலெட்சுமி , வாய மூடுறியாடா நீ... ஏண்டா கேள்வி கேட்குற.. என்று ஒருமையிலும் ஆபாசமாகவும் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

அவரது வழக்கறிஞரும், உடன் வந்த வீரலட்சுமியும் ஓடிச்சென்று விஜயலட்சுமியை சமாதானப்படுத்த முயன்றனர்.

அவரது நடவடிக்கையால் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments