இந்திய அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 641

இந்திய அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2-வது இடம் வகிப்பதாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2022-23ம் நிதியாண்டில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது என்றார்.

இந்தியாவில் தனிநபர் வருமானத்தின் சராசரி ஆண்டுக்கு 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments