நாமக்கல் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால்,காதலனுடன் இணைத்து கணவனை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.

நாமக்கல் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால்,காதலனுடன் இணைந்து கணவனை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.
செல்லிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பெரியசாமி, கடந்த புதன்கிழமையன்று மனைவி பிரேமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரேமாவின் கைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததை தொடர்ந்து அவரின் நடவடிக்கைகளில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படவே, பெரியசாமி சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், பேக்கரியில் வேலைப்பார்த்து வந்த பிரேமா அதேப்பகுதியைச் சேர்ந்த நந்தி கேசவன் என்பவருடன் பழகி வந்ததும், இதனை பெரியசாமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இருவரையும் வேலையில் இருந்தும் பேக்கரி மேலாளர் நீக்கிவிட்டதால் ஆத்திரமடைந்து பெரியசாமியை கொலை செய்ய இருவரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது இதற்காக, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கணவனை நள்ளிரவு நேரத்தில் பிரேமா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மோகனூர் செல்லும் வழியில் காத்திருந்த நந்திகேசவனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொலை செய்து விட்டு விபத்து போல நாடகமாடியது தெரிய வந்தது. தலைமறவான நந்தி கேசவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments