லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்ற ஸ்வேதா சாரதா..!

0 1263

மும்பையில் நடைபெற்ற வண்ணமயமான அழகிப் போட்டியில் ஸ்வேதா சாரதா என்ற இளம் பெண் லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார்.

முன்னாள் பிரபஞ்ச அழகியான சோனல் குக்ரஜா அவருக்கு மகுடம் சூட்டினார். மொத்தம் 160 அழகியர் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றில் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11ஆவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் வழக்கமான அழகிப் போட்டிகளைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. மணம் ஆனவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், கர்ப்பிணிகள், மூன்றாம் பாலினத்தவர் உள்பட அனைவருக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து, நடிகைகள் ஸ்ரீநித ஷெட்டி, சங்கீதா பிஜ்லானி உள்ளிட்ட பலர் நடுவர்களாக பொறுப்பேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments