சென்னை மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.. குடும்பத்தோடு சென்று குளித்த போது நீருக்குள் மூழ்கியதாக தகவல்.. !!

0 4765

சென்னை, மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹரிஹரன் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை மாலையில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள நீச்சல் குளத்தில் குடும்பத்தினரோடு குளித்துவிட்டு மேலே ஏறிய போது அவரது 4 வயது மகன் அனிருத் மயங்கிய நிலையில் தண்ணீருக்குள் கிடந்துள்ளார். சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்ற விதிமுறை இருக்கும்பட்சத்தில் 4 வயது சிறுவனுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பராமரிப்பிற்காக நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments