சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாலம் தொழில்நுட்ப விமான நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

0 746

சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாலம் தொழில்நுட்ப விமான நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக முழக்கத்துடன் மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், விக்ரம் லேண்டர் நிலவில் தடம்பதித்தபோது பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்காவில் இருந்த தமக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து செய்திகள் வந்ததாக தெரிவித்தார். பிரதமர் பேச்சின் போது, கூட்டத்தில் நபர் ஒருவர் மயங்கி விழந்தார். அவரை பரிசோதிக்குமாறு தனது மருத்துவர்கள் குழுவிடம் பிரதமர் உடனடியாக அறிவுறுத்தினர்.

டெல்லியில் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் போது தலைநகர் வாசிகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதாக கூறிய பிரதமர், உலகத் தலைவர்கள் வருகையினால் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட சிரமங்களுக்காக டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments