காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு காலை, பிற்பகல் என இரு வேளையாக நடைபெற்றது

0 609

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 621காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பொது பிரிவினருக்கான தேர்வு, இன்று நடைபெற்றது.

இத்தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 610 பேர் விண்ணப்பித்திருந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் ஆயிரத்து 500 பேர் இன்று தேர்வு எழுதினர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பொது எழுத்து தேர்வும், பிற்பகல் 3.30 முதல் 5.10 மணி வரை தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடைபெற்றன.

இந்நிலையில், கடந்த முறையை காட்டிலும் இந்த முறை வினாத்தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments