இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர்... 6 சவரன் தங்க நகை மோசடியில் கைது

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களை வலையில் வீழ்த்தி, கன்னியாகுமரி மாவட்ட காசி போன்று வலம் வந்த வினீத் என்பவர் ஆறு சவரன் தங்க நகை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்த வினீத் என்ற மீசை வினீத் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகி தம்மை பின் தொடரும் இளம் பெண்களை இச்சைக்கு பலியாக்கி உள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டா மூலம் தொடர்பு ஏற்பட்ட பெண் ஒருவரிடம் 6 சவரன் தங்க நகையை அடகு வைத்ததுடன் அதனை திருப்பி கேட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கியுள்ளார்.
இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் பேரில் வினீத் கிளிமானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments