இந்தியாவின் இஸ்ரோ சாதனையைப் பாராட்டிய பாகிஸ்தான்... இந்தியாவுக்கு எதிராகப் பேசுகிற முன்னாள் அமைச்சரும் பாராட்டு

0 6684

சந்திரயான் 3 நிலவில் வெற்றிக்கொடி நாட்டியதைப் பார்த்து உலக நாடுகள் வியந்து இந்தியாவைப் பாராட்டி வருகின்றன.

வேறு வழியில்லாமல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.

நிலவை அடைவது மிகப்பெரிய சாதனை என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்பு சந்திரயான் 3 சாதனையை மனிதகுலத்துக்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் முன்னாள் அறிவியல் துறை அமைச்சர் ஃபவத் ஹூசேன் சவுத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments