டிஎஸ்பி வீட்டில் இறந்த நிலையில் கிடந்த இளைஞர் உடல் மீட்பு... போலீசார் தீவிர விசாரணை

0 1306

மதுரை அருகே காவல் துணை கண்காணிப்பாளர்  வீட்டில் இறந்த நிலையில் கிடந்த இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த உதய் என்பவர் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் மேலாளராக இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு உதய் வீட்டின் மொட்டை மாடியில் தனது நண்பர்களுடன் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அவரை காணாத தால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள டிஎஸ்பி பிரபு வீட்டில் யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக கூறவே உதயின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது உதய் என்பதை அறிந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments