அ.தி.மு.க கொடி, சின்னம், கரை வேட்டி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதற்கு மேல் பயன்படுத்தக்கூடாது: ஜெயகுமார்

அ.தி.மு.க கொடி, சின்னம், கரை வேட்டி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை அ.தி.மு.க. கட்சி தலைமையகத்தில் பேட்டியளித்த ஜெயகுமார், மாநாடே தங்களுக்கு பெரிய வெற்றி கொடுத்த சூழ்நிலையில், அ.தி.மு.க.வை ஒற்றை தலைமை சிறப்பாக வழி நடத்துவதற்கான வாய்ப்பை நீதிமன்ற தீர்ப்பு உருவாக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கூடிய அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி ஒருவர் அலுலவகத்துக்கு வந்த தொண்டர்கள் அனைவருக்கும் இளநீர் வழங்கினார்.
Comments