மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து பொறையார் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி சமத்துவபுரம் அரசு விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில், செம்பனார்கோவில் தாமரை மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ரிஷிபாலன், 400 மீட்டர் ஓட்டம் பந்தயத்தில் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3மணி நேரம் தாமதமாக வந்ததால், கடும் வெயிலில் தங்கள் மகனை காக்க வைத்ததாக, பெற்றோர்ம குற்றம்சாட்டுகின்றனர். பிற்பகல் 3 மணிக்கு தங்கள் மகன் மயங்கிய விழுந்த நிலையில், மாலை 6 மணிக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தங்கள்பிள்ளை மயங்கிய விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இனி தமிழ்நாட்டில் ஒருவருக்கும் ஏற்படக் கூடாது என்று கண்ணீர் மல்க மாணவனின் தாயார் நித்தியா வலியுறுத்தியுள்ளார்.
Comments