சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் விடுவிப்பு..!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அட்லாண்டாவில் உள்ள சிறையில் சரண் அடைந்தார்.
அவர் கைது செய்யப்படுவதற்கான, சம்பிரதாயமான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 20 நிமிடங்களில் 2 லட்சம் டாலர் மதிப்புடைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். விடுவிக்கப்பட்ட பின்னர் தமது சொந்த ஊரான நியூ ஜெர்சிக்கு விமானம் மூலம் டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். அப்போது அமெரிக்க வரலாற்றில் இது துயரமான நாள் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments