தம்பி உங்களுக்கு இன்னும் திருமணம் செய்யிற வயசு வரல.. காதல் ஜோடியை பிரித்த போலீஸ்..! கொத்தனார் மாப்பிள்ளை பரிதாபம்

0 2162

இன்ஸ்டாகிராமில் கொத்தனாரை காதலித்து வீட்டை விட்டுச்சென்ற கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், காதலனுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்று கூறி போலீசார் மாணவியை பெற்றோடன் அனுப்பி வைத்தனர். தமிழ் சினிமா பாணியில் பெற்றோருக்கு டுவிஸ்ட் வைத்த 2 கே கிட்ஸின் இன்ஸ்டா காதல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. 

பால்வாடியில் நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு கலர் டிரஸ்ல போறது மாதிரி வர்ர இவங்க தான் போலீசுக்கு டேக்கா கொடுத்து பெற்றோரிடம் இருந்து நேக்கா எஸ்கேப்பான 2கே கிட்ஸ் காதல் ஜோடி..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியான இளம் பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்பிளமோ ஏரோநாட்டிக்கல் இன்ஞினியரிங் படித்து வந்தார். புதன்கிழமை அன்று கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் குளச்சல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

இந்த நிலையில் வியாழக்கிழமை குளச்சல் காவல் நிலையத்திற்கு , தனது இன்ஸ்டா காதலன் வினு மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்தார் மாயமான மாணவி

தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கொத்தனார் வேலை பார்க்கும் வினுவை கடந்த 3-வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்த மாணவி, பெற்றோர் மிரட்டுவதால் தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என பெற்றோர் மீது குற்றம் சாட்டி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்

போலீசார் , மாணவியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதோடு இருவரும் மேஜர் என்பதால் அவர்களின் விருப்பபடியே அனுப்ப முடியும் என மாணவியின் பெற்றோரிடம் அறிவுறுத்தி சமரசம் பேசி வந்தனர். ஆனால் மாணவியின் பெற்றோரோ, ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் தங்கள் மகளை கொத்தனார் மாப்பிள்ளையுடன் அனுப்பக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தாங்கள் இருவரும் மேஜர் என்பதற்கு ஆதரமாக இருவரது ஆதார்கார்டுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரின் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்து போது திடீர் திருப்பமாக காதலன் வினுவுக்கு 20 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதையடுத்து கொத்தனார் தம்பி, நீங்க இன்னும் திருமண வயதை எட்டாததால் சட்டப்படி உங்களுடன் மாணவியை அனுப்ப இயலாது என்று மறுத்த போலீசார், 2கே கிட் மாப்பிள்ளை வினுவிடம் இருந்து அந்த லிட்டில் பிரின்சஸை பிரித்து அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு கேட்டு வந்த இடத்தில் காதலனிடம் இருந்து சட்டப்படி பிரிக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை அழைத்து செல்வதற்காக காவல் நிலைய வளாகத்தில் காருடன் காத்திருந்த பெற்றோரின் கவனத்தை திசைத்திருப்பி சினிமா பாணியில் காதலன் வினுவுடன் மீண்டும் பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத அவரது பெற்றோர் கையில் கிடைத்த மகளை காதலுக்கு பறிகொடுத்துவிட்டு ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்

மறுபடியும் முதல்ல இருந்தா... என்றவாறு காதல் ஜோடியை மீண்டும் தேடிவருகின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments